பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி பகுதியில் வருவாய்த்துறை பறக்கும் படை தாசில்தார் அப்துல் மன்னன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பகுதியில் இருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சிறு மூட்டைகள் இருந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,200 கிலோ ஆகும். இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.