சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குஞ்சப்பனை சோதனைச் சாவடிக்கு அருகில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் கேரடாமட்டம் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது கையில் இருந்த பையை வாங்கி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் மது பாட்டில்கள் இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புண்ணியமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த 28 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.