Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 50 கிராம் கஞ்சா பறிமுதல்….. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த விக்டர் சாந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விக்டர் சாந்தகுமாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |