சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் பிரம்ம குண்டம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பது தெரியவந்தது. இவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் துரைசாமியை கைது செய்து அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.