மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மகாமணி, ராஜா, தினேஷ்குமார் ஆகியோர் திருட்டு மோட்டார் சைக்கிளை வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மகாமணி ,ராஜா ,தினேஷ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.