அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடமிருந்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
இதனை அடுத்து லாரி உரிமையாளர்களுக்கு தல 25000 ரூபாய் வீதம் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வலது, இடது, பின் புற பகுதிகளில் தடுப்புகள் அமைக்காத கனரக வாகனங்களுக்கு அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.