உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள வாணியகுளம் பகுதியில் பேச்சியம்மாள் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் இளங்கோவன், ஜெகதீஸ் என்பவர்கள் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து சேரன்மகாதேவி கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.