Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. காரில் இருந்த 214 கிலோ குட்கா…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

காரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குட்காவை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீஜீவாடி சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி காரின் ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பதும், பெங்களூரில் இருந்து மதுரைக்கு 214 கிலோ குட்காவை சட்டவிரோதமாக  கடத்தி செல்வதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் மனோஜ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரில் இருந்த 214 கிலோ குட்காவை  பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |