Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. ரூ. 1.27 கோடி ரூபாய் பறிமுதல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாசாலை அருகே பெரியார் சிலை பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் பையை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அந்த சோதனையின் போது 1.27 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணம் குறித்து கேட்டபோது நிலம் வாங்குவதற்கு முன் பணம் எடுத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் பணத்திற்கான சரியான ஆவணம் ஏதும் இல்லாததால் காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |