Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சவேரியார் பாளையத்தில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ஜெகநாதன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம்  இருந்து 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |