Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கணபதிபுரத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை மறித்து காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அதில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் பாஸ்கர் மற்றும் சத்தியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிந்த காவல்துறையினர் பாஸ்கர் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |