சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் திருச்சி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் 80 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தசரதன் மற்றும் முகமது தாரிக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.