உரிய ஆவணம் இன்றி மது பாட்டில்கள் கொண்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி சத்திரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜபிரபு என்பவர் உரிய ஆவணம் இன்றி 48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் உரிய ஆவணம் இன்றி மது பாட்டில்களை கொண்டு வந்த ராஜாபிரபுவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.