Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்….. விசாரணையில் வெளியான தகவல்கள்….!!

பல பெண்களிடம் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஸ்கூட்டரை மறித்து அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபின் என்பது தெரியவந்தது. இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி மளிகை கடையில் வேலை பார்க்கும் மேரி ஸ்டெல்லா என்ற பெண்ணிடம் முட்டை வாங்குவது போல் நடித்து 10 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் சுபினை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கருங்கல் காவல்நிலையத்தில் சுபினின் மீது 5 திருட்டு வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதேப்போன்று வேறு சில காவல்நிலையங்களிலும் சுபினின் மீது திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவரிடமிருந்து 30 1/2 பவுன் தங்க நகைகள், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |