Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பொலவக்காளிபாளையம் மாரியம்மன் கோவிலுக்குள் கடந்த 14-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அதன்பின் அந்த மர்மநபர் 2 பவுன் தங்க நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஒத்தக்குதிரை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாலபாளையம் பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பதும், மாரியம்மன் கோவிலில் தங்க நகையை திருடி சென்றது சண்முகம் தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |