சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதில் மொத்தம் 1 டன் அரிசி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் கொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அதன் பிறகு காவல்துறையினர் விஷ்ணுவை கைது செய்து அரிசியையும் பறிமுதல் செய்தனர்.