புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பையில் 163 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(32) என்பதும், அவருடன் வந்தவர் ராஜபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(34) என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து தினேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள்,ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.