Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக  புகையிலை பொருட்கள் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே கண்ணுபொத்தை ரயில்வே பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒருவர் கொண்டுவந்த மூட்டைகளை கீழே தள்ளி விட்டு தப்பித்து சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 340 கிலோ இருந்தது.

இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். அதன்பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இவர் கொய்யாபழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அவரிடமிருந்த 1,5,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |