சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கக்கனல்லா சோதனைச் சாவடியில் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அதன் மொத்த மதிப்பு 82,500 ஆகும். இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊட்டியை சேர்ந்த ரகீப் மற்றும் பிரவீன்குமார் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.