ஆளற்ற தீவில் ஒரு மாத காலம் சிக்கிய 3 பேரை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்..
கடந்த மாதம் கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் பஹாமாஸ் என்ற பகுதிக்கு படகில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கடலில் மூழ்கியது. இதில் தப்பித்த அம்மூவரும் Anguilla Cay என்னும் ஆளற்ற பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர்.
அதோடு ,அவர்கள் அங்கு உயிர் பிழைப்பதற்காக எலிக்கறி, தேங்காய்கள், சங்கு கறி, என கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ,ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடலோரக் காவல் படையினரை, பார்த்த அவர்கள் கொடியசைத்து உதவிகேட்டனர். உடனே அப்பகுதிக்கு கடலோர காவல்படையினர் நெருக்கமாக சென்று பார்த்தபோது மூன்று பேர் அத்தீவில் ஒரு மாத காலமாக மாட்டிக்கொண்டனர் என தெரியவந்தது. உடனடியாக அவர்கள் ஒரு குழுவை ஹெலிகாப்டரில் அனுப்பி ,அவர்களுக்கு தண்ணீர் உணவு மற்றும் தொடர்பு கொள்ள ரேடியோ கொடுக்கப்பட்டது.
பின்னர் மறுநாள் அவர்களை பத்திரமாக தீவில் இருந்து மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர் இதனையடுத்து மருத்துவர்கள் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிவித்தத்தையெடுத்து , அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்க கடலோர காவல் படையினர் தீவில் சிக்கியவர்களை மீட்டுகும்போது எடுத்த காணொளி பதிவு வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .
#BreakingNews @USCG is assisting 3 people who have reportedly been stranded on Anguilla Cay, Bahamas for 33 days. An Air Station Miami HC-144 Ocean Sentry aircrew has dropped a radio, food and water. More to follow.#D7 #Ready #Relevant #Responsive #searchandrescue #USCG pic.twitter.com/D263ptTarz
— USCGSoutheast (@USCGSoutheast) February 9, 2021