ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ராட்சத நண்டுகள் சூழ்ந்துகொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று கிறிஸ்துமஸ் தீவிற்கு தங்கள் குழந்தைகளுடன் கேம்பு சென்றுள்ளது. அங்கு அவர்கள் சாப்பிட உணவு சமைத்து உள்ளனர். அப்போது உணவு தயாரான சிறிது நேரத்தில் அதன் வாசனையை நுகர்ந்தபடி ஏதோ ஒன்று ஊர்ந்து வருவதை குடும்பத்தினர் கண்டுள்ளனர். அவை 3 அடி நீளம் கொண்ட ராட்சத நண்டுகள் ஆகும். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
அதில் சுமார் 50 நண்டுகள் ஊர்ந்து வந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் நாற்காலியில் கால்களை மேலே தூக்கி கொள்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது. காணொளியை பார்த்த ஒருவர் அந்த நண்டுகள் குழந்தைகளை சாப்பிடுமா என்று கேள்வி எழுப்ப, அவை பொதுவாக அப்படி செய்வதில்லை என சுற்றுலாத்துறையை சேர்ந்த ஒருவர் வேடிக்கையாக கூறியுள்ளார். இந்த நண்டுகள் உணவை மட்டும் தேடி வந்து எடுத்துச் சென்று விடுமே தவிர மனிதர்களுக்கு எந்த தொந்தரவையும் கொடுப்பதில்லை என தெரியவந்துள்ளது.