Categories
சினிமா தமிழ் சினிமா

தீ இது தளபதி…. “மாற்றுத்திறனாளி ரசிகரை தூக்கிய விஜய்”….. வைரலாகும் க்ளிக்..!!

மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..

பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். மேலும் ஆலோசனைக்கு முன்னதாக 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூர் அலுவலகத்திற்கு முன் குவிந்தனர். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்தார்..

 

இந்நிலையில் நடிகர் விஜயை காண நிறைய ரசிகர்கள் வந்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரும் வந்திருந்தார். அவரை நடிகர் விஜய் தனது இரு கைகளால் தூக்கி வைத்திருந்தார்.. விஜய் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தூக்கி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் உட்பட பலரும் விஜயை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்..

https://twitter.com/itzmeRAFiii/status/1602601476266000384

Categories

Tech |