Categories
தேசிய செய்திகள்

தீ விபத்தில் சிக்கிய நாயை மீட்க முயன்றபோது ராணுவ அதிகாரி உயிரிழப்பு!

தீ விபத்தில் சிக்கிக்கொண்ட தனது நாயைக் காப்பாற்ற முயன்றபோது ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு -காஸ்மீரில் எல்லைப் பகுதி ஒன்றில் தங்கியிருந்த ராணுவ அதிகாரியின் குடிசை ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்தில் சம்பவம் ஏற்பட்டது .

இது குறித்து உயர் காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, பாரமுல்ல மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில் ராணுவ அதிகாரி அங்கித் புத்ராஜா தனது மனைவியுடன் வசித்து வந்தார். ராணுவத்துடன் தொடர்ப்புகளை தரக்கூடிய எஸ் .எஸ் .டி .சி குல்மார்க்குடன் இணைக்கப்பட்ட கார்ப்ஸ் சிக்கனளல்கள் பிரிவின் மோஜராக அவர் பணியாற்றி வந்தார். அவர்கள் இரண்டு நாய்களையுடன் உடன் வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவர்கள் தங்கியிருத்த குடிசையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மேஜர் அங்கித் புத்ராஜா உடனடியாக அவரது மனைவியையும், அவரது ஒரு நாயையும் மீட்டார். இதற்கிடையில் தீ அதிக அளவில் பரவத் தொடங்கிது.

எனினும் இன்னொரு நாயையும் மீட்க வேண்டுமென அவர் மீண்டும் குடிசைக்குள் நுழைந்தார். ஆனால் நாயை போராடி மீட்கும் போது , மோஜருக்கு 90 சதவிதம் வரை திக்காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த தலைமை அதிகாரிகள் அவரது சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |