மத்திய பிரதேசம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் நள்ளிரவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு 40 குழந்தைகளில் 36 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதனையடுத்து நான்கு குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் .அதுமட்டுமின்றி விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.