Categories
அரசியல்

“துக்கம் தொண்டையை அடைக்குது…. தேம்பித் தேம்பி அழுத அமைச்சர்”…. சோகத்தில் மூழ்கிய பொங்கல் விழா….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு பயனாளிகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் வரை வழங்கப்படும் எனவும் டோக்கன் பெற்ற பயனாளிகள் வந்து பொங்கல்பரிசு பொருட்களை வாங்கி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் கிராமத்தில் அமைச்சர் சி.வே.கணேசன் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது மனைவியின் இறப்பை நினைத்து தேம்பி அழத் தொடங்கினார். தான் வெற்றி பெற்ற பிறகு தனது சொந்த கிராமமான கழுதூருக்கு முதன்முறையாக வரும்போது தனது மனைவி கூட இல்லை என எண்ணி அவர் மேடையில் தேம்பி தேம்பி அழத் தொடங்கினார். மனைவியை இழந்து கண்கலங்கிய அமைச்சரை அருகிலிருந்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சமாதானம் செய்தனர்.

Categories

Tech |