Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர விபத்து..!!

திண்டுக்கல்லில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டியில் பொம்மக்காள் (40) என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 10-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லுக்கு பொம்மக்காளின் உறவினர்கள் வந்தனர். அதன் பின்னர் 25-க்கும் மேற்பட்டோர் மினிலாரியில் திண்டுக்கல்லில் இருந்து வீரசிக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதில் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பூத்தன் என்பவர் மினிலாரியை ஓட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கடை பிரிவு என்ற இடத்தில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் திடீரென சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீரசிக்கம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, பூத்தன், ரமேஷ், சந்திரன், பெருமாள், சூரி (என்ற) நாகராஜ் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |