Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளத்தில் குளித்துகொண்டிருந்த நபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நாங்கூர் பகுதியில் கூலி தொழிலாளியான பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பத்மநாபன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி மற்றும் பூம்புகார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய பத்மநாபனை நீண்ட நேரமாக தேடியும் அவர்களால் அவரை மீட்க முடியவில்லை. இதனையடுத்து கீழக்கரை மீனவர் கிராமத்திலிருந்து சில மீனவர்கள் மீன்பிடி படகுடன் விரைந்து சென்று தீயணைப்பு துறையினருடன் பத்மநாபனை தேடுதலில் ஈடுபட்டனர். அதன்பின் 15 மணி நேரத்தேடலுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்மநாபனை சடலமாக மீட்டெடுத்தனர். இதுகுறித்து திருவெண்காடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் கண்முன் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |