Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றவர்கள்… சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துக்கவீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வைரவன்பட்டியில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய இறுதி சடங்கில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனாகால கட்டத்தில் கூடியதை அறிந்து மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் ஊராட்சி மன்ற தலைவர் சிவமணி அந்த கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்தார்.

அதன்படி கொரோனா பரிசோதனை துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மற்றவர்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் துக்க வீட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அறிந்த மற்றவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |