Categories
கரூர் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. காரில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

காரின் கண்ணாடியை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை வெளியே நிறுத்தி விட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  கார்த்திக் வெளியே வந்துள்ளார்.அப்போது காரின் பின்பக்க கண்ணாடி உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து   காரின் கதவை திறந்து பார்த்தபோது  10 பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்று மடிக்கணினிகள் ஆகியவற்றை  மர்ம நபர்கள்  திருடியிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் கார்த்திக்  புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்   நகை மற்றும் மடிக்கணினியை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது  காங்கேயம் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடி கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டையில் வசிக்கும் வின்சென்ட் என்பதும் வங்கி மேனேஜரின் கார் கண்ணாடியை உடைத்து நகை மற்றும் மடிக்கணினியை திருடியவர் என்பதும்  தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த10 பவுன் தங்க நகை மற்றும் மடிக்கணினிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வங்கி  மேனஜர் கார்த்திக்கிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |