துக்க வீட்டிற்கு வந்த விவசாயியை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் விவசாயியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மூர்த்தி அவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குமரேசன், வடிவேல், ரத்தினம் ஆகிய 3 பேர் மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த சூரியபிரகாஷ், பாலமுருகன் என்ற 2 பேர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மூர்த்தி, சூரியபிரகாஷ், பாலமுருகன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.