நாம் துக்க வீட்டிற்கு செல்லும்போது அங்கு சில தவறுகளை செய்வதால் துக்க வீட்டில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் நல்லது கெட்டது எதுவென்று தெரியாமல் சில இடங்களில் தவறாக நடந்து கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இந்நிலையில் துக்க வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உற்றார் உறவினர்களை கண்டவுடன் உடனடியாக சிரிக்கக் கூடாது. மரணமடைந்தவரின் வாழ்க்கையை யதார்த்தமாக விமர்சிப்பது கூடாது.
துக்க வீட்டில் செய்யும் மரணத்திற்கு பிந்தைய சடங்குகளில் உடன்பாடு இல்லை என்று, அப்படி செய்யவில்லை இப்படி செய்யவில்லை என்று கருத்து சொல்வது தவறு. நேரமாகிறது என்று சொல்லிக்கொண்டிருப்பது முற்றிலும் தவறானது. மேலும் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பது ஆகியவை துக்க வீட்டில் உள்ளவர்களின் மனவேதனையை அதிகரிக்கச் செய்யும். அதனால் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.