Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“துடைப்பத்தால் அடிவாங்கும் மக்கள்” இப்படி ஒரு வினோத வேண்டுதலா?…. எந்த கோவிலில் நடக்கிறது தெரியுமா?….!!

பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவில்  பக்தர்கள் வினோதமான வழிபாடு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நாடகம், திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், வில் வளைப்பு, அரக்கு மாளிகை பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், பாண்டவர் பிறப்பு, அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு, தெருக்கூத்து நாடகம் மற்றும் மகாபாரத சொற்பொழிவு போன்றவைகள் நடைபெற்றது.

இந்த விழாவின் கடைசி நாளான நேற்று துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது கிராமங்களை சுற்றி நாடக கலைஞர்கள் சண்டை போட்டனர். அதன்பிறகு பீமன், துரியோதனன் சண்டை காட்சிகள், துரியோதனன் இறந்த பிறகு அவனுடைய ரத்தத்தை திரௌபதி கூந்தலில் தேய்த்துக் கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க அவர்களை பூசாரி துடைப்பத்தால் அடிக்கும் வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரௌபதி அம்மன் வீதி உலா, கங்கையில் நீராடுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீமிதி திருவிழா போன்றவைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |