மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவரை துடைப்பத்தால் அடிக்கிறார். அதுமட்டுமின்றி வகுப்பறையில் இருக்கும் சுவிட்ச் போர்ட், மின்விசிறி ஆகியவற்றையும் மாணவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்துகின்றனர்.
இந்த காட்சியை சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை பள்ளி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.