சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ வின் தாய் அரசுப்பள்ளி சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். சரன்ஜித் சிங் சன்னி பதாவுர் தொகுதியில் 37, 550 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் களம் இறங்கிய லாப்சிங் உகோக் வெற்றி பெற்றார்.இதுகுறித்து கவுர் கூறும்போது, “எனது மகன் தேர்தலில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரை எதிர்த்து போட்டியிட்டாலும் என் மகன் வெற்றி பெறுவார் என நம்பினோம். துடைப்பம் (ஆம் ஆத்மி சின்னம்) எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கம் ஆகும். நாங்கள் எப்போதும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். தனது மகன் எம்எல்ஏ வாக இருந்தாலும் துப்புரவு பணியை தொடர்ந்து செய்வேன் என அவரது தாய் கூறியுள்ளார்.