Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துணிக்கடையில் மலர்ந்த காதல்….. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்குபட்டி தொட்டம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(23) என்ற மகன் உள்ளார். இவர் பிரபல துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் வேலை பார்க்கும் தேவதர்ஷினி(19) என்ற பெண்ணும், உதயகுமாரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உதயகுமாருடன் தேவதர்ஷினியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |