Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துணிக் கடையில் திருட வந்த நபர்…. பொம்மையிடம் சில்மிஷம்…. ஷாக்கான போலீசார்…..!!!!!!

கன்னியாகுமரி குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ஜோசப்பெவின் (39). இவர் தற்போது நாகர்கோவில் குருசடிபகுதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இதில் ஜோசப்பெவின் செட்டிகுளம் பகுதியில் சொந்தமாக துணிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் ஜோசப்பெவின் நேற்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்றபோது துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. அத்துடன் அங்கிருந்த சில துணிகளும் திருடுபோய் இருந்தது.

இதுகுறித்து ஜோசப் பெவின் கோட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடை முழுதும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் கடையின் மேல் பகுதியிலுள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது. ஆகவே அதன் வழியாக வந்த மர்ம ஆசாமி துணிகளை திருடி இருக்கலாம் என்று கருதினர். அதன்பின் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அக்காட்சிகளை பார்த்ததும் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவற்றில் கடைக்குள் நுழைந்த ஆசாமி பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்தார். பின் அங்கு இருந்த 2 பொம்மைகளின் ஆடைகளை கழற்றினார். அதனை தொடர்ந்து அந்த ஆசாமியும் நிர்வாண நிலைக்கு சென்று பொம்மையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இந்த காட்சியை வைத்து பார்க்கும்போது ஆசாமி காமக்கொடூரனாக இருப்பானோ என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். ஆகவே வேறு ஏதேனும் விபரீத செயல் அந்த ஆசாமியால் நடப்பதற்கு முன் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இதுபற்றி  புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |