Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துணிச்சலாக ரயிலில் கஞ்சா கடத்தல்…. ஈரோட்டில் மடக்கிப் பிடித்த போலீசார்…. பெண் உட்பட இருவர் கைது….!!

இரயில்வே காவல்துறையினர் ரயிலில் கஞ்சா கடத்திய இருவரை  கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு இரயில்வே நிலையத்திற்க்கு வந்த போது அங்கு காவல்துறையினர் ஓவ்வொரு பெட்டியாக ஏறி தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுஅந்த ரயிலின் s-7 பெட்டியில் சந்தேகத்துக்குரிய ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. அந்தப் பெட்டியை காவல்துறையினர் திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது .  இதைதொடர்ந்து போலீசார் அருகிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் அவர்கள் 2 பெரும் தென்காசி மாவட்டதிலுள்ள திருமலாபுரம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிததுவரும் 23 வயதான ஆனந்தராஜ் என்பவரும் வாசுதேவநல்லூர் பகுதியில் இருக்கும் கலைஞர் காலனியை சேர்ந்த சுடலை ராஜ் என்பவருடைய மனைவி 24 வயதான மகாலட்சுமி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து இரயில்வே காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |