தமிழில் சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்ப காலகட்டத்தில் மலையாளத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஒரு காலகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம்ஹிட் அடிக்கதொடங்கியது. அதன்பின் மலையாளத்தில் முக்கிய நடிகையாக வளம் வந்தார் இந்த நிலையில் திடீரென அவரது திரையுலக பயணத்தில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் தற்போது அதிரடியாக ரிஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் சுந்தர் சி ஜோடியாக வெளியான பட்டாம்பூச்சி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். சமீபத்தில் ரிலீசான இந்த படத்தில் பல நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கும் சவாலான லெஸ்பியன் கதாபாத்திரத்தில் துணிச்சலாக ஹனிரோஸ் நடித்திருக்கின்றார். அவர் மட்டுமல்ல தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சுவும் இதே போல் கதாபாத்திரத்தில் ஹனி ரோசுக்கு இணையாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த பலரும் அணிரோஸ் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள்.
இதனை அடுத்து இந்த படத்தில் நடித்தது பற்றி ஹனிரோஸ் பேசும்போது இயக்குனர் வைசாக் என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்காக அவருக்கு தான் என் முதல் நன்றியை தெரிவிக்க வேண்டும். மேலும் இதுவரை மோகன்லாலுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன் ஆனாலும் இந்த படத்தில் தான் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமான முதன்முறையாக நடித்திருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற வித்தியாசமான நடிப்புக்கு தீனி போடுகிற சவாலான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.