Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துணியை எடுத்து வருவதில் தகராறு…. விஷம் குடித்து மயங்கிய தம்பதியினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குடும்ப தகராறில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பங்களாபுதூர் கள்ளியங்காடு பகுதியில் விவசாயியான ஈஸ்வரன்(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்வரனுக்கு சரண்யா(28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய கார்த்திகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது காய வைத்த துணிகளை வீட்டிற்குள் எடுத்து வந்து வைக்குமாறு ஈஸ்வரன் சரண்யாவிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஈஸ்வரன் வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யா ஈஸ்வரனிடம் இருந்து விஷத்தை பிடுங்கி குடித்துவிட்டார். இதனால் மயங்கி கிடந்த தம்பதியினரை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து ஈஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |