Categories
தேனி மாவட்ட செய்திகள்

துணிய துவச்சிட்டு இருந்த பொண்ணு கிட்ட ஏன்டா இப்படி செஞ்சிங்க…. காவல்துறையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாலிபர் பெண்ணிடம் தகராறு செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது அண்ணனுடைய மகளான சுதா என்பவர் அவரது வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து துணியை துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த யோகேஷ், சூரியபிரகாஷ் ,ஜெகதீஷ் ஆகிய 3 நபர்களும் சுதாவிடம் வந்து முகவரி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைக் கண்ட அவரது பெரியப்பா மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் சுதாவிடம் வம்பிழுத்த 3 பேரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஜெகதீஷ் உட்பட 3 பேரும் ஒன்றாக சேர்ந்து அவர்களை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கணேசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் யோகேஷ்ஷையும் கைது செய்துள்ளனர். மேலும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |