Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு டிரெய்லர் எப்போ தெரியுமா…? ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு…!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின்  இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் டிரெய்லரை வரும் 31ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

Categories

Tech |