அஜித் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது.
இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனை மஞ்சுவாரியார் உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்த நிலையில் படக்குழு சென்னையில் இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கின்றது.
இதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது . இந்நிலையில் இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ஒரு நல்ல படம் தானாக விளம்பரப்படுத்திக் கொள்ளும். நிபந்தனை அற்ற அன்புடன் அஜித் என பதிவிட்டு இருக்கின்றார்.
"A good film is promotion by itself!! – unconditional love!
Ajith— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2022