Categories
சினிமா தமிழ் சினிமா

“துணிவு”… வேற லெவலில் கலக்கப்போகும் அஜித்?…. வெளியான டுவிட் பதிவு…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் முதல் பாடலான சில்லா..சில்லா பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஜிப்ரான் இசையில் “சில்லா.. சில்லா” எனத் துவங்கும் பாடலை அனிருத் பாடி இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் முடிவடைந்தன. துணிவு படம் வருகிற பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துணிவு திரைப்படம் குறித்தும், அஜித்தின் நடிப்பு பற்றியும் இயக்குனர் ஹெச். வினோத் பேசியிருப்பதாக டுவிட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அவற்றில் “துணிவு படம் எந்த சமூகபிரச்சனை தொடர்பான கதையும் இல்லை. இது சுவாரஸ்யமான கமெர்ஷியல் திரைப்படம் தான். முழுக்க முழுக்க குடும்பமாக பார்க்கக்கூடிய படம் தான் துணிவு. நடிப்பதிலும் சரி, வசனம் பேசுவதிலும் சரி துணைவு படத்தில் வேறு மாதிரியான அஜித்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். சண்டை காட்சிகளில் கூட அஜித் டூப் போடவில்லை” என ஹெச்.வினோத் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறது.

https://twitter.com/GhibranOfficial/status/1600863338438987777?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1600863338438987777%7Ctwgr%5E8d2f817ea4def66a8a3c7d8217c3544772334a03%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F152163%2Fh-vinoth-reveals-what-this-about-ajiths-thunivu-movie

 

Categories

Tech |