Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

துணி காயப்போட சென்ற தாய்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவில் மணிகண்டன்- மாரீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதுடைய பரமேஸ்வரன் என்ற மகனும், 1 1/3 வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று மாலை மாரீஸ்வரி துவைத்து துணிகளை காய போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த முத்துலட்சுமி தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தார்.

இதனை அடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டு முத்துலட்சுமி பரிதாபமாக இறந்துவிட்டாள். இதனை அடுத்து துணியை காய போட்டுவிட்டு கீழே இறங்கி வந்த மாரீஸ்வரி தனது குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்த அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |