மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பர்வீன் என்ற பெண் குடிசை வீட்டில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியின் மீது துணிகளை காய வைத்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து பர்வீன் வலியால் துடித்துள்ளார். இவருடைய சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பர்வீனின் கணவர் அகமது மனைவியை காப்பாற்றுவதற்காக ஓடியுள்ளார்.
அப்போது அகமதுவின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து தாய், தந்தை துடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் அத்னான் மற்றும் மகள் மஹீம் அவர்களைத் தொட குழந்தைகள் 2 பேரின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் பர்வீன், அகமது, அத்னான், மஹீம் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.