Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற தொழிலாளி…. மது போதையில் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசனம் பெரியகாடு பகுதியில் கட்டிட தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  நேற்று முன்தினம் சுரேஷ் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் சதீஷ் அருகே இருந்த குடிசைக்கு தூங்க சென்றார். அப்போது “நான் துணி துவைக்க செல்கிறேன்” என சுரேஷ் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் சுரேஷ் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சதீஷ் அவரை தேடி சென்ற போது கிணற்றின் மேல் பகுதியில் துணிகள் இருந்தது.

இதனால் சுரேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்து சதீஷ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுரேஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |