அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராகிறார்.
உலகமே எதிர்நோக்கியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், புதிய வேட்பாளராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
ஜோ பைடன் அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற நிலையில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். அதிபராக உள்ள ஜோ பைடன், துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ்சுக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.