வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கார்த்தியாயினி, வெங்கடேசன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தான் அரசியலை செய்கிறோம்.
மாநில கட்சிகளான மம்தா பானர்ஜி திமுக போன்ற கட்சிகள் தேசிய கட்சியாகும் நோக்கத்தில் உள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கனவு காண்கிறார், இந்தியாவின் துணை பிரதமராக தான் ஆகிவிட்டு, தனது மகனை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டுமென காய் நகர்த்தி வருகிறார். இருந்தாலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 450 இடங்களில் பாஜக வெற்றி பெறும். மத்திய அரசின் திட்டங்களை திமுக எதிர்க்கட்சியாக குறை சொன்னது. ஆனால் இன்று திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களுக்கு சட்டமன்ற பட்ஜெட்டில் வக்காளத்து வாங்கியுள்ளது. திமுகவின் பொய் வாக்குறுதிகள் நூறு நாளில் வெளுத்துவிட்டது, மக்கள் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டார்கள் என்று அவர் கூறினார்.