சமீபத்தில் இளைஞர் நலன் & விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதன் பிறகு விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதனால் விளையாட்டுத் துறை மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அவர் தான் திமுகவின் அடுத்த தலைவர் என அமைச்சர் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசினார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என கேரள மாநில திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பொங்கலுக்கு பிறகு இதுவும் நடக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.