மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட ஏராளமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் சி பி ஐ யின் அடுத்த கட்ட நடவடிக்கையாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி சிபிஐ அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மது விற்பனை கொள்கை முறையிட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.